இந்தியாவில் கடந்த சில நாட்களாக H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது..

இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிபுணர்கள் இந்த H3N2 வைரஸ் அடுத்த கொரோனா பெருந்தொற்றாக மாறுமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளனர்.. டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டிரேன் குப்தா, கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகளுக்கு காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இல்லாததால் காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளன என்று தெரிவித்தார். வைரஸ் பொதுவாக சாதாரண சூழ்நிலைகளில் உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்…
டெல்லியில் உள்ள பிரைமஸ் மருத்துவமனை மருத்துவர் எஸ்.கே. சாப்ரா பேசிய போது “ கொரோனாவுக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை, இரண்டும் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரே மாதிரியாக பரவுகின்றன. லேசான கோவிட்-19 அறிகுறிகள் லேசான காய்ச்சல் அறிகுறிகளைப் போலவே இருக்கும், தவிர, காய்ச்சல் சளி, உடல்வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியான மற்றும் சுயாதீனமான நோய்த்தொற்றுகளாக இருப்பதால், அவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கொரோனா மற்றும் H3N2 ஆகியவை சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரே மாதிரியான பரிமாற்ற முறைகள் மூலம் பரவுகின்றன. காய்ச்சல், இருமல் மற்றும் உடல்வலி போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளும் காணப்படுகின்றனர்.. இருப்பினும், கோவிட்-19 இருப்பது ஒருவருக்கு H3N2 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளது அல்லது இந்த இரண்டு நிகழ்வுகளும் எந்த வகையிலும் இணைக்கப்பட்டுள்ளன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை..” என்று தெரிவித்தார்..
நாட்டில் மார்ச் 9-ம் தேதி வரை H3N2 உட்பட பல்வேறு இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளின் மொத்தம் 3038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. நாட்டில் H3N2 உட்பட இன்ஃப்ளூயன்ஸா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. சமீபகாலமாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..