வேலை நிறுத்தப் போராட்டம்… சிலிண்டர் விநியோகம் பாதிக்குமா…? இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி

LPG Cylinder

வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் காஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.

மொத்தம் 5,000 டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வாடகை ஒப்பந்தத்தில் 700-க்கும் அதிகமான காஸ் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தகுதியான அனைத்து காஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுவதும் உள்ள 5,000 காஸ் டேங்கர் லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. வரும் பண்டிகை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் இண்டேன், பாரத் காஸ், எச்பி விநியோகஸ்தர்கள் தேவைக்கேற்ப சிலிண்டர்களை இருப்பில் வைத்துள்ளனர். இதனை எண்ணெய் நிறுவனங்கள் கண்காணித்தும் வருகின்றன.

Vignesh

Next Post

பர்தா அணிந்து ஓட்டு போட வரும் பெண்களை அடையாளம் காண சிறப்பு ஏற்பாடு...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

Sun Oct 12 , 2025
பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]
vote brkha 2025

You May Like