முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும்.. இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்ட புதுமைப்பெண்.. தனது திட்டங்கள் மூலம் ஜெயலலிதா இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார்.
தன்னை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவர் ஜெயலலிதா, பிரிந்தவர்களை இணைத்து 1991-ல் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா.. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினர்.. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநிலத்தின் நிதியை கொண்டு நலத்திடங்களை செய்தார்.. கட்சிக்கு சோதனைக்கு வந்த போது, என்னிடம் முதலமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இறந்த பின்னர் என்னை கட்டாப்படுத்தி முதலமைச்சர் ஆக்கினார்கள்.. கட்டாயத்தின் பேரில் தான், நான் 3-வது முறையாக முதலமைச்சர் ஆனேன். முதலமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதவுக்கு எந்த நம்பிக்கை துரோகமும் நான் செய்யவில்லை.. ஜெயலலிதா தந்த முதலமைச்சர் பணியை நிறைவாக முடித்த மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது.. தமிழ்நாட்டின் முதல்வராக 3-ம் முறையாக கட்டாயத்தின் பேரில் பொறுப்பேற்றேன்..
சாதனை, சரித்திரங்கள் பல படைத்த ஜெயலலிதாவின் புகழ் பூமி உள்ளவரை நிலைத்து இருக்கும்.. நடைபெற்ற 11 தேர்தலில் ஒரு தேர்தலில் கூட பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறவில்லை.. தற்போது அதே நிலைமை தான்..” என்று தெரிவித்தார்..
இதையடுத்து கடைசி நேரத்தில் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் செல்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், மதியாதார் வாசலை மிதியாதே என ஔவையார் கூறியுள்ளார் என்று தெரிவித்தார்..
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது..
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுக, தவெக பக்கம் சென்று விட்ட நிலையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.. மேலும் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும்,.. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார்.
ஓபிஎஸ் திமுக உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? என்பது தெரியவில்லை.. இந்த சூழலில் அதிமுகவில் மீண்டும் இணையப் போவதில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.. எனவே அவர் திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பாராரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
Read More : Breaking : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை.. கடன் முழுமையாக தள்ளுபடி.. இபிஎஸ் அதிரடி..!



