பணியின் போது மேலதிகாரி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.90 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஜப்பானில் டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
2023 ஆம் ஆண்டு, D-UP நிறுவனத்தில் பணியாற்றிய சடோமி என்ற பெண் ஊழியரை பணியின் போது மேலதிகாரி ஒருவர் திட்டியதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலைக்கு முயன்ற அந்த பெண் நீண்ட காலமாக கோமாவில் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் உயிரிழந்தார்.
D-UP நிறுவனமும் அதன் தலைவர் சடோமியின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் எனக் கூறி குடும்பத்தினர் ஜப்பானில் டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் D-UP நிறுவனமும் அதன் தலைவர் சடோமியின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் என்று தீர்ப்பளித்தது. மேலும் உயிரிழ்னத பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.90 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
நிறுவனம் தலைவரான மிட்சுரு சகாய் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது. மிட்சுரு சகாய் பதவி விலகியதை தொடர்ந்து D-UP நிறுவனம் தனது வலைத்தளத்தில் “இறந்த ஊழியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பணியிட சூழலை மதிப்பாய்வு செய்து மேம்படுத்த முயற்சிப்போம்” என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பு, பணியிடங்களில் மனச்சோர்வு மற்றும் துன்புறுத்தலை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும், நிறுவன தலைவர்களின் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.