நாக்பூர் மாவட்டம் தருடி குர்த் பகுதியில் நடந்துள்ள ஒரு கொடூரக் கொலை, முழு மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 38 வயதான சந்திரசேன், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்தார். அவரால் நடக்க கூட முடியாத நிலையில் பாத்ரூம் அழைத்து செல்வது முதல் முழு நேரமும் கவனித்து கொள்வது வரை மனைவி திஷா தனியாக செய்து வந்தார். அந்த சமயத்தில் ஆசிஃப் என்ற இளைஞனுடன் திஷாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென ஒரு நாள் சந்திரசேகன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக திஷா கூறிய நிலையில், உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பிரேத பரிசோதனையில் சந்திரசேகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதைத் தொடர்ந்து, திஷா மற்றும் ஆசிப் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். திஷா மற்றும் சந்திர சேகரனுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: அஜித்குமார் கொலை.. தடையை மீறி போராட்டம் நடத்துவேன்.. சீமான் அதிரடி..