#கிருஷ்ணகிரி :குடும்ப தகராறில் குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்.. குழந்தை நீரில் மூழ்கி இறந்த சோகம்..!

கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள கீரனப்பள்ளி கிராமத்தில் பெயிண்டர் வேலை செய்து வருகின்ற தமிழரசன் வசித்து வருகிறார். இவரின் மனைவி சந்தியா (21)  என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மதுமிதா என்ற மகள் இருக்கிறாள். 


இந்த நிலையில் தமிழரசனுக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மனைவி கடந்த திங்கட்கிழமை அன்று கணவன் – மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த அந்த பெண், கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குழந்தை மதுமிதாவுடன் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

இந்த செயலால் குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து குழந்தையை இறந்த நிலையில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#திருச்சி :பிறந்த சிலமணி நேரத்தில் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கொடூரம்..!

Wed Dec 7 , 2022
திருச்சி மாவட்ட பகுதியில் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்திற்கு அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த சத்தத்தினை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சிறிது மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.  இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவிய நிலையில், இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

You May Like