பரபரப்பு…! பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தண்டனை…!

anna university rape case 11zon

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனின் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை டிச.24 அன்று கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி கடந்த வாரம் தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தண்டனை விபரம் வெளியாக உள்ளது.

கடந்த வாரம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேட்டபோது, தனக்கு வயதான தாய் இருப்பதாகவும், தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதாலும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென குற்றவாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அரசுத் தரப்பில் ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More: ஆதவ் அர்ஜுனா விவகாரம்.. நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை..! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி…!

Vignesh

Next Post

உஷார்!. சிகரெட்டை விட அதிக தீங்கு விளைவிக்கும் சாக்லெட்?. உண்மை என்ன?

Mon Jun 2 , 2025
சிகரெட்டும் சாக்லேட்டும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு பொருட்கள். இன்றைய இளைஞர்களுக்கு, இந்த இரண்டு விஷயங்களும் கூலாக மாறுவதற்கான ஒரு வழியாகும். சிகரெட் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, அது புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், சாக்லேட்டைப் பற்றி இதுபோன்ற விஷயங்கள் அதிகம் கேள்விப்படுவதில்லை. இதனால்தான், காதலை வெளிப்படுத்துவதற்கோ அல்லது காதலியை சமாதானப்படுத்துவதற்கோ, சாக்லேட் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதல் விருப்பமாக இருக்கிறது, ஆனால் அது […]
chocolate cigarettes 11zon

You May Like