BREAKING| “மகளிர் உரிமை தொகை 2,000.. இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்” தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்..!

MK Stalin dmk 1

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.


திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வெளியிட்டார். இந்த முறை தி.மு.க. எந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், 7 வது முறையாக திமுக ஆட்சி அமைக்க உள்ளது. தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவும், மறுக்கவும் முடியாது. திமுகவை எதிர்ப்பவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்கள். சொன்னதை மட்டும் அல்ல.. சொல்லாததையும் செய்து காட்டியுள்ளோம் என்றார். தொடர்ந்து திமுகவின் ஐந்து ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு கூறினார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்:

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

* மகளிர் உரிமை தொகை 2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்.

* விவசாயிகளுக்கு நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

* 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

* பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

* 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

* நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1500 மாத உதவித்தொகையுடன் பயிற்சி.

* அரசு மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் கருவி இருமடங்காக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா.

* ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் புதிய வேலைவாய்ப்பு.

* சிறுபான்மையினருக்கு தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

* கிராம சாலைகள் ரூ.10000 கோடியில் சீர் செய்யப்படும்.

* ரூ.1000 கிராம கோவில்கள் சீரமைக்கப்படும்.

* திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்.

* தொழிற்சாலைகளுக்கு செல்லும் மகளிருக்கு உதவ 1000 குழந்தைகள் காப்பகம்.

* BC, MBC பிரிவினர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

* மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்.

* பெண்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்.

* 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் கால தாமதம் இன்றி நிரப்பப்படும்.

* தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்ச கோடியாக உயர்த்தப்படும்.

Read more: தினமும் 2.5GB டேட்டா.. IPL பார்க்க OTT FREE.. அடிச்சு தூக்கும் Airtel..! என்னென்ன சலுகைகள் இருக்கு..?

English Summary

“Women’s rights amount 2 thousand.. expansion of breakfast scheme” Stalin made election promises..!

Next Post

விவாகரத்து பெறாமல் லிவ்-இன் உறவில் இருக்கலாமா..? முரணான தீர்ப்புகளை வழங்கிய ஹைகோர்ட்!

Sun Mar 29 , 2026
Two recent rulings from the Allahabad High Court have taken contrasting views on live-in relationships involving married individuals.
divorce1

You May Like