பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு ஐ.ஐ.டி. சென்னை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் மேலாண்மைதுறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணிபுரிவோர் இப்படிப்பில் சேரும் வகையில் மாற்று வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறும். 2 ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 2025 அக்டோபர் 19-ம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுடையவர்கள் https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த சிறப்பு எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2025 நவம்பர் 8 மற்றும் 9 ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து சிறப்பு எம்.பி.ஏ. படிப்பு 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது