fbpx

சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென்று நடந்த துப்பாக்கிச் சூடு….! 5 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி….!

ஆசியாவின் வல்லரசு நாடாக திகழ்ந்து வருவது சீனா என்னதான் ஆசியாவின் வல்லரசு நாடாக இருந்தாலும் கூட அந்த நாடு இந்தியாவிடம் எப்போதும் நட்பு பாராட்டியது இல்லை. ஏனென்றால், ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் நாடுதான் இந்தியா.

ஆனால் சீனாவுக்கும் உலக அரங்கில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு தற்போது அமெரிக்கா இருக்கும் இடத்திற்கு தான் சென்று விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மனதில் இருக்கிறது.

இந்த நிலையில், சீனா தன்னுடைய பாரம்பரிய முறையான நிலவை அடிப்படையாக வைத்து lunar new year என வருடம் தோறும் புத்தாண்டை கொண்டாடி வருகிறது.

அதனடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த புத்தாண்டை நேற்றைய தினம் உற்சாகமாக கொண்டாடினர்.

அதனை முன்னிட்டு, அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கின்ற நடன அரங்கத்தில் இந்த புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென்று அந்த பகுதியில் துப்பாக்கியால் சபை மாறியாக சுட்டார் இதில் 5 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து 2வது நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டு 20 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு அல்ஹம்ரா அருகே உள்ள அரங்கிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாகவும் ஆனாலும் தாக்குதல் நடத்த இயலாமல் அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. 2 நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சாலையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில், நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை சுற்றி வளைத்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அதிலிருந்து நபர் காவல் துறையிடம் வாக்குவாதம் செய்து அதன் பிறகு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

ஒருவேளை இவர் தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்திய குற்றவாளியா? என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஆசிய கண்டத்தைச் சார்ந்தவர் என்றும், அவருடைய வயது 30 முதல் 55 வயது வரை இருக்கலாம் என்று கலிபோர்னியா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அத்துடன் சந்தேகத்திற்கு உரிய நபரின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொதுமக்களை அடையாளம் காட்டுமாறு தெரிவித்திருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Next Post

செல்லப் பிராணிகள் வளர்ப்போரின் கவனத்திற்கு..!! கொடூர வைரஸால் கொத்து கொத்தாக செத்து மடியும் நாய்கள்..!!

Mon Jan 23 , 2023
நாய்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்றால், கடந்த 3 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் உயிரிழந்ததால், அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த […]

You May Like