fbpx

பிறக்கும்போதே வயது 1..!! பிறந்தநாளுக்காக காத்திருக்க தேவையில்லை..!! ஜனவரி 1 வந்தால் வயது 2..!! குழப்பமா இருக்கா..?

பொதுவாக ஆண்டுகள் செல்ல செல்ல நமக்கு வயது ஏறி கொண்டே இருக்கும். இது தான் உலக வழக்கம். ஆனால் தென் கொரியர்கள் ஒரே இரவில் 1 வயதை குறைந்து விட்டனர். இது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்த இளமை தென் கொரியர்களுக்கு உடல் ரீதியாக கிடைக்கவில்லை. மாறாக அந்நாட்டில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஒரு சட்டத்தின் மூலம் மக்கள் 1 வருடம் இளமையாகி விட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டமானது ஒரு தனிநபரின் வயது கணக்கிடும் பழைய முறையை நீக்கியிருக்கிறது.

அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வயதை கணக்கிடும் பழைய முறையானது ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே துவங்குகிறது. அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்கு 1 வயது என்பதே அவர்களின் பழைய கணக்கீடு. அதே போல இதுவரை, தென் கொரியர்கள் பிறக்கும் போது 1 வயதாகக் கருதப்பட்டு வந்ததோடு, அவர்களின் உண்மையான பிறந்தநாள் வரை காத்திருப்பதற்கு பதிலாக, ஜனவரி 1-ஆம் தேதி வந்தவுடன் தங்கள் வயதில் 1 வருடம் சேர்த்து கொள்ளும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள்.

இதை பற்றி இன்னும் புரியும்படி சொன்னால், அங்கு பிறக்கும் ஒரு குழந்தைக்கு பிறந்தவுடன் 1 வயது என கணக்கிடப்படுவதோடு, அதன் அடுத்த பிறந்த நாள் வருவதற்குள் புதிய ஆங்கில ஆண்டின் துவக்க மாதமான ஜனவரி 1 வந்தால் அந்த குழந்தையின் வயது 2 எனக் கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தால் அன்று அந்த குழந்தைக்கு 1 வயது எனவும், அடுத்த நாளான ஜனவரி 1ஆம் தேதி அதே குழந்தைக்கு 2 வயதாகவும் இருக்கும்.

இதற்கிடையே, அந்நாட்டு ஊடகமான Yonhap குறிப்பிடுகையில் குடிக்க, புகைபிடிக்க, பள்ளிக்கு செல்ல, ராணுவத்தில் சேர என அந்நாட்டின் அனைத்து நிர்வாக, சிவில் மற்றும் நீதித்துறை விவகாரங்களிலும் சட்டப்பூர்வ வயதாக சர்வதேச வயதே நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், தென் கொரிய அரசு அலுவலகங்களில் புதிய வயது கணக்கிடும் சட்டத்தால் அதிக குழப்பம் இல்லை. எனினும் தென் கொரிய அரசின் சர்வதேச வயது கணக்கிடும் முறையை இன்னும் ஏற்று கொள்ளாதவர்களின் பட்டியலில் அந்நாட்டில் இருக்கும் டேட்டிங் மற்றும் மேட்ச்மேக்கிங் சர்விஸ்கள் அடக்கம்.

புதிய வயது கணக்கிடும் முறை

அந்நாட்டில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச வயது கணக்கீட்டு முறையின்படி, ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் வயது உலக நாடுகளின் வழக்கப்படி பூஜ்ஜியமாகவே கணக்கிடப்படும். பிறந்தே பிறகே வயது கணக்கிடப்படும் என்ற இந்த புதிய நடைமுறையை சுமார் 70% தென்கொரிய மக்கள் வரவேற்றுள்ளனர். வயதைக் கணக்கிடும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

பள்ளி மற்றும் ராணுவம் போன்ற நாட்டின் முக்கிய துறைகளில் ஓல்ட் ஏஜ் கவுண்ட்டிங் ப்ராசஸ் தொடரும். 2004ஆம் ஆண்டில் அந்நாட்டில் பிறந்த அனைவரும் மிலிட்டரி என்லிஸ்ட்மென்ட் ப்ராசஸிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஏனென்றால், 2004இல் பிறந்த அனைவரும் 19 வயதுக்குட்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், மது மற்றும் புகையிலை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 19 ஆக தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

BB Tamil 7..!! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த புது சிக்கல்..? இதற்கும் கமல் தான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Fri Jul 7 , 2023
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ மற்ற அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சிம்ம சொப்பனம் என கூறலாம். ஒவ்வொரு வாரமும், டிஆர்பியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருவதால், பல தொலைக்காட்சிகள் பிக்பாஸ் சமயத்தில், தங்களின் டிஆர்பி-யை தக்க வைக்க வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அதிலும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும், 2 நாட்கள் தான் தாறுமாறாக டிஆர்பியை எகிறவைக்கும். […]

You May Like