தனக்கு வீட்டுப்பாடம் அலர்ஜி இருப்பதாக கூறி சீன சிறுவன் அழுது கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
11 வயது சிறுவனின் தாய் முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படிப்பதாக கூறப்படுகிறது… அந்த வீடியோவில், சிறுவன் வீட்டுப்பாடம் செய்வதைத் தவிர்க்க பாசாங்கு செய்து அழுவதைக் காணலாம். வீட்டுப்பாடம் எழுதிய போது, உடல்நிலை சரியில்லாமல் மூக்கின் மேல் டிஸ்யூவை வைக்கும் போது அவரின் தாய், என்ன நடந்தது என்று கேட்கிறார்..
அதற்கு அவர், தனக்கு வீட்டுப்பாடம் ஒவ்வாமை என்று பதிலளிக்கிறார்.. உடனே “உனக்கு என்ன அலர்ஜி? என்று அவரின் தாய் கேட்கிறார்.. அதற்கு அச்சிறுவன் “எனக்கு புத்தகங்களின் வாசனை ஒவ்வாமை இருக்கிறது” என்று பதிலளிக்கிறார்..
அவரது தாயார் அச்சிறுவனை மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைத்தார், ஆனால் அச்சிறுவன் அதை ஏற்க மறுத்துவிட்டார். “கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏன் ஒவ்வாமை இல்லை, ஆனால் இந்த ஆண்டு உங்களுக்கு திடீரென்று அறிகுறிகள் தோன்றின?” என்று சிறுவனின் தாய் கேட்டதற்கு, ஏனென்றால் அது அடைகாக்கும் காலம்” என்று சிறுவன் பதிலளித்தார்.
தனது மகன் இப்படிச் செய்வது இது முதல் முறையல்ல என்றும் சிறுவயதிலிருந்தே கற்பனைக் கதைகளைச் சொல்லும் பழக்கம் கொண்டவர் என்று அவரின் தாய் வீடியோவில் கூறுகிறார்.. இந்த வீடியோ சீன சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாக பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்..