கோழிக்கோடு மாவட்டம் மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்த ஆயிஷா ரஷா (21), மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர், வெங்கேரி பன்னடிகல் பகுதியைச் சேர்ந்த பஷீர்தீன் முகம்மது என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
கோழிக்கோட்டின் எரஞ்சிபாலம் பகுதியில் வாடகை வீட்டில் இருவரும் ஒன்றாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது. பஷீர்தீன், உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பஷீர்தீன் பணிபுரியும் ஜிம் மையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பஷீர்தீன் செல்லக்கூடாது என்று ஆயிஷா கூறியதாகவும், ஆனால் அவர் அதை புறக்கணித்து விழாவில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறுக்குப் பின்னர், ஆயிஷா ரஷா அவர்கள் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கில் தொங்கிய நிலையில் ஆயிஷா சடலத்தை பார்த்த பஷீர்தீன் அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் தற்கொலைக்கு முன் பஷீர்தீனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி ஒன்று கண்டறியப்பட்டது. அதில், “என் சாவுக்கு நீ தான் காரணம்” என்று அவர் எழுதியிருந்தது. இதனடிப்படையில், போலீசார் பஷீர்தீன் முகம்மதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: 10 நாட்களுக்கு பின் இன்று குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ஏமாற்றத்தில் நகைப்பிரியர்கள்..!