” விளைவுகளை சந்திக்க நேரிடும்…” தொகுதி மறு வரையறை.. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை..!

mk stalin 2

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 850-ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது… உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு இது கூடுதல் சாதகமாக அமையும் என்ற அடிப்படையில், தென் மாநிலங்களிலிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் இந்த மோசதாக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. தனது எக்ஸ் பதிவில் ” தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்.. தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது.

இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது.

அவசர கதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு. #WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வெல்வோம்_ஒன்றாக..” என்று தெரிவித்துள்ளார்..

Read More : ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும்.. தீரன் சின்னமலை பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..

RUPA

Next Post

இந்திய அரசியலை புரட்டிப் போட்ட 4 தொகுதி மறுவரையறைகள்.. ஏற்பட்ட மாற்றங்கள் என்ன..? - முழு விவரம்..

Fri Apr 17 , 2026
4 constituency redefinitions that changed Indian politics.. What changes have occurred..?
lok sabha

You May Like