உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் தல்சந்த் அகிர்வார் (35) என்ற இளைஞர், தனது மனைவி வீட்டு உரிமையாளருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தல்சந்த் என்ற நபர் தனது மனைவி ஜாங்கி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், ஒரு நாள் வீட்டிற்கு திரும்பியபோது, மனைவி ஜாங்கி வீட்டு உரிமையாளருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனால் ஏற்பட்ட கோபத்தில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஜாங்கி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த தல்சந்த், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தனது மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு உருக்கமான வார்த்தைகள் பேசினார். “நான் மூன்று நாட்களாக தற்கொலை செய்ய முயற்சி செய்து வருகிறேன். நீ என்னோடு ஒருமுறை பேசியிருந்தால் நான் இப்படி செய்திருக்க மாட்டேன். எனக்கு செய்தது போல யாருக்கும் துரோகம் செய்யாதே…” என கூறி கண்ணீர் மல்க அழைப்பை துண்டித்தார்.
அன்று மாலை தல்சந்தின் சகோதரர் சந்தர்பன் வீட்டிற்கு வந்தபோது, அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து தல்சந்தின் சகோதரர், மனைவி ஜாங்கி மற்றும் வீட்டு உரிமையாளருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், ஜாங்கியின் குடும்பத்தினர் இதனை மறுத்து, “தல்சந்த் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடிப்பார்” என புகாரை மறுத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் உரையாடல்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: பிரதமர் மோடி பிகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச தைரியம் இருக்கா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..



