2 நாட்கள் அடைத்து வைத்து இளம்பெண் சீரழிப்பு..!! பாலியல் மாஃபியாக்களுக்கு தொடர்பு? கேரளாவை உலுக்கிய சம்பவம்..!!

rape 1

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், இணையதளத்தில் வெளியான ஸ்பா மேலாளர் பணிக்கான விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்துள்ளார். கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி காலையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற அவருக்கு வேலையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினமே மாலை நேரத்தில் அக்கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பணி சாராத ஊழியர்கள் சந்திப்பு இடப்பள்ளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாகவும், புதிய ஊழியர்களுக்குச் சேலை வழங்கி வரவேற்பு அளிக்கப்படும் என்றும் கூறி அவரை அங்கு வரவழைத்துள்ளார்.


விடுதிக்கு சென்ற அப்பெண்ணை அக்கும்பல் கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளது. அந்த மதுவில் முன்கூட்டியே சக்திவாய்ந்த மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததால், அவர் நிலைகுலைந்து சுயநினைவை இழந்தார். இதனைப் பயன்படுத்தி, அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களாக அந்த அறையிலேயே அவரை சிறைவைத்து தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இக்கொடூர செயல்களை தங்கள் செல்போன்களிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த கொடூரத்தை உணர்ந்து பேரதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தீவிர மன உளைச்சலாலும் பயத்தாலும் உடனடியாக புகார் அளிக்க தயங்கியுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தோழி அளித்த தகவலின் அடிப்படையில் கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் அப்பெண்ணின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து கொச்சி மாநகர காவல் ஆணையர் காளிராஜ் மகேஷ் குமார் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு, கொச்சியில் நான்கு இடங்களில் ஸ்பா மையங்களை நடத்தி வரும் ஸ்ரீராஜ் (30) மற்றும் அவரது கூட்டாளி ஜித்து (27) ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இக்கும்பலுக்கு நிழல் உலக தாதாக்கள், ஆள் கடத்தல் அல்லது பாலியல் மாஃபியாக்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். மேலும், இளம்பெண் தப்பியோட முயன்றபோது அவரைத் தடுத்து நிறுத்திய ஆண் மற்றும் தந்திரமாக விடுதிக்கு அழைத்து வந்த பெண் உட்பட தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க வலைவீசப்பட்டுள்ளது.

Read More : வடகிழக்கு பருவமழை எதிரொலி..!! சென்னையில் உச்ச அலெர்ட்..!! அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Next Post

BREAKING | அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு..!! ஆன்லைன் மூலம் விண்ணப்பம்..!! வெளியானது அரசாணை..!!

Mon Oct 5 , 2026
தமிழ்நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண்களின் திருமணச் செலவுகளுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட ‘அண்ணன் சீர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் ஒரு உயர்தர பட்டுப்புடவை ஆகியவை சீர்வரிசையாக முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக மற்றும் நிதி […]
cm vijay speech

You May Like