என் பெயரை கெடுத்துட்டீங்க..! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க..! அமைச்சர் ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்..!!

Aadhav Stalin 2026

சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக ஐடி விங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த அவதூறு பதிவை நீக்குவதோடு, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் நோட்டீஸ் அனுப்பினார்.


நோட்டீஸுக்கு எந்த பதிலும் வராததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த பதிவு திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அவர் தான் பொறுப்பு. அமலாக்கத்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ தனது உறவினர் அல்ல. எனவே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் இணைந்து தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

சமூக வலைதள பதிவை நீக்கிவிட்டு, பொய்யான தகவலை பரப்பியதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

Read More : “நீங்க ஒன்னும் இங்கிலாந்து அரசர் அல்ல”; பதவிக்கு வந்துட்டா ஆஜராக முடியாதா?. உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Next Post

முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்ட பெண்..!! அடையாளம் மறைக்க கருப்பு கிரீஸ்..!! திருவள்ளூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி..!!

Fri Aug 28 , 2026
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]
Acid 2026

You May Like