கடையநல்லூர் பகுதியில் காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்…..! முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு….!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நூற்றாண்டை தாண்டிய தாருஸ்ஸலாம் பள்ளியின் 2023 ஆம் ஆண்டிற்கான முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு மற்றும் பெருநாள், சந்திப்பு நாள் நடைபெற்றது. 700க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றுக் கொண்டனர்.

கடையநல்லூரில் உள்ள இந்த பள்ளி 100 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளி என்று கூறப்படுகிறது. இந்த பள்ளியில் காமராஜர் வந்து பார்வையிட்டதாகவும், சுதந்திரத்திற்கு முன்பாகவே இந்த பள்ளி கட்டமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு 100 வருடங்களுக்கு முன்னர் கடையநல்லூரில் கட்டமைக்கப்பட்ட முதல் பள்ளி தாருஸ்ஸலாம் பள்ளி என்று கூறப்படுகின்றது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் காணொளிகள் போடப்பட்டது. அதோடு முன்னாள் மாணவ, மாணவிகள் அவரவர் ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

1921 ஆம் வருடம் தாருசலாம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அதோடு இது சுதந்திரத்திற்கு முன்பே கடையநல்லூரில் கட்டமைக்கப்பட்ட முதல் பள்ளி என்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது 1921 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் அதே ஆண்டு ஆண்டு விழாவை கொண்டாடிய நிலையில், தற்போது இந்த பள்ளியின் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Next Post

இந்திய கடற்படையில் 242 காலிப்பணியிடங்கள்…..! உடனே விண்ணப்பியுங்கள்…!

Tue May 2 , 2023
இந்திய கடற்படைகள் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ் எஸ் சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு 242 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. மதிப்பு எங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 14 என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான கூடுதலான விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பம் செய்வதற்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை […]

You May Like