திமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து 1000 பேர் அதிமுகவில் இணைந்தனர்…! யார் வந்தாலும் பாதுகாப்பு உறுதி…!

EPS aiadmk 2025

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி தேடி வரும். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும்.


குடிமராமத்து திட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஏரிகள் திட்ட அனைத்து ஏரிகளையும் தூர்வாரி அதிக தண்ணீர் சேமிக்கும் வழி செய்தோம். கரோனா காலத்திலும், மழை வெள்ளத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ரூ.12,100 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டும் ரூ.560 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா உருவாக்கினோம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வில்லை என்றார்.

Vignesh

Next Post

குழந்தைகளுக்கு ஏன் தினமும் முட்டை கொடுக்க வேண்டும்?. 5 முக்கிய காரணங்கள் இதோ!.

Sun Oct 12 , 2025
இப்போதெல்லாம், குழந்தையின் உணவைத் தீர்மானிப்பது பெற்றோருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. என்ன உணவளிக்க வேண்டும், என்ன உணவளிக்கக்கூடாது என்பது குறித்து பெற்றோர்கள் அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இருப்பினும், உணவில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே, ஒவ்வொரு குழந்தையின் தட்டிலும் இருக்க வேண்டிய ஒரு சூப்பர்ஃபுட் பற்றி நாம் பேசினால், அது முட்டைகள். முட்டைகள் மலிவானவை, ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் […]
eating eggs weight gain 1

You May Like