Indian navy: 12 மணிநேர போராட்டம்!… சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் மீட்பு!… இந்திய கடற்படை அதிரடி!

Indian navy: அரபிக்கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை 12 மணிநேர போராட்டத்திற்கு பின் இந்திய கடற்படை மீட்டுள்ளது.

இஸ்ரேலுடனான மோதலில் ஹமாஸுக்கு உதவுவதற்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இந்திய, அரேபிய மற்றும் செங்கடல்களில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைத் தாக்கி வருவதோடு கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் சரக்கு கப்பல்களை கடத்துவது, கொள்ளையடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் 23 பாகிஸ்தானியர்களுடன் சென்ற ஈரானைச் சேர்ந்த மீன்பிடி படகை மறித்த கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காண்பித்து கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மீன்பிடி படகில் இருந்து உதவி கோரி பேரிடர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மீட்பு பணிக்கு விரைந்தது. 12 மணி நேர துரத்தலுக்குப் பின் கடற்கொள்ளையர்கள் சரணடைந்த நிலையில் படகில் இருந்த 9 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு மீன்பிடி படகில் இருந்த 23 பாகிஸ்தானியர்களையும் இந்திய கப்பற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

Readmore: Attack: கோவையில் பரபரப்பு..! அதிமுக கூட்டணி கட்சியினர் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்…!

Kokila

Next Post

Govt: ஏப்ரல் 1-ம் முதல் வெள்ளி தோறும் கட்டாயம்...! கோதுமை விற்பனையாளர்களுக்கு அதிரடி உத்தரவு...!

Sat Mar 30 , 2024
ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊகவணிகங்களைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சங்கிலித் தொடர் போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் தங்கள் கோதுமை இருப்பு நிலையை போர்ட்டலில் (https://evegoils.nic.in/wheat/login.html) 01.04.2024 முதல் அறிவிக்க வேண்டும் என்றும், பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறு உத்தரவு வரும் வரை அறிவிக்க வேண்டும் என்றும் […]

You May Like