கவனம்… அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம்…! ஒரே நாளில் எத்தனை வழக்குகள் பதிவு…?

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாயும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 1000 ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 10,000 ரூபாயும், பைக் ரேஸில் ஈடுபடுவோருக்கு 5,000 ரூபாயும் அபராதமாகப் போக்குவரத்து காவல்துறையினர் வசூல் செய்து வருகின்றனர்.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி, சென்னையில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15.5 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மிஸ் பண்ணிடாதீங்க... வேலை இல்லாத நபர்களுக்கு... இன்று காலை 10 மணி முதல்...! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!

Fri Oct 28 , 2022
தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ நான்காம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது .எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார் துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு […]

You May Like