வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவார்டாட் மற்றும் அபு ஹமாமா உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 27 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு துணை ராணுவப்படையுடன் இணைந்து செயல்படும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கிராமப்புறங்களில் நடைபெறும் ஆயுதத் தாக்குதல்களும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
Also Read :ஹைதியில் பயங்கரவாத கும்பல் தாக்குதல்! 47 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் கடத்தல்!. அதிர்ச்சி தகவல்!


