தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு..!பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

flu fever

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது.


பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் H1N1 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திடீரென ஏற்படும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் மற்றும் தசை வலி, கடுமையான சோர்வு, குளிர் நடுக்கம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். சிலருக்கு மூச்சுத்திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சுவலி போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Also Read: சூடானில் ஆயுதக்குழு தாக்குதல்..! 4 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு..!

maha

You May Like