4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. விசாரணையில் சிக்கிய 15 வயது சிறுவன்!!

minor rape 150357672

குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் பீகாரில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமஸ்திபூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அங்கார்ஹாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவருக்கு உறவினரான 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவத்துக்குப் பிறகு உடலில் காயங்களுடன் சிறுமி அழுதபடி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையை அணுகினர்.

புகார் கிடைத்ததும் போலீசார் விசாரணையை தொடங்கி, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 15 வயது சிறுவனை கைது செய்தனர். விசாரணையில், அந்த சிறுவன் 8-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தியிருப்பது தெரியவந்தது.

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய பழக்கம் அவனுக்கு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனுக்கு 15 வயது என்பதால், அவனை சிறுவர் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தி, அதற்கேற்ப சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Also Read: சமந்தாவின் கம்பேக் படத்திற்கு இத்தனை வரவேற்பா? ரூ.100 கோடியை கடந்த வசூல்!

Saranya

Next Post

தமிழகத்தில் ஆண்களின் இறப்பு அதிகரிப்பு.. வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரம்!

Tue Sep 29 , 2026
ஒரு குடும்பத்தின் வருமானத்தையும் பொறுப்புகளையும் சுமக்கும் வயதிலேயே ஆண்களின் உயிரிழப்பு அதிகரித்து வருவது தமிழகத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. கணவனை இழக்கும் பெண்கள், தந்தையை இழக்கும் குழந்தைகள் என ஒரு ஆணின் அகால மரணம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சூழல் உருவாகியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான தமிழக இறப்பு பதிவுகளைப் பார்க்கும்போது, பெண்களைவிட ஆண்களின் உயிரிழப்பு கணிசமாக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் 4,01,860 ஆண்கள் […]
Death 2026

You May Like