ஸ்டாலின்னா மாஸ்.! 6 லட்சம் கோடி முதலீடு.! 26 லட்சம் வேலை வாய்ப்பு.! ட்ரில்லியன் டாலர் இலக்கு.! வர்த்தக மாநாட்டின் முக்கிய அம்சங்கள்.!

சர்வதேச முதலீட்டாளர்களின் வர்த்தக மாநாடு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச தொழில் நிறுவனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் சிறப்பு பங்கேற்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் ரூ.6,64,180 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த புதிய முதலீடுகளால் தமிழகத்தில் 26,90,657 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். இந்த வர்த்தக மாநாட்டின் முடிவில் நன்றி தெரிவித்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் விடியல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

ஜப்பான் சிங்கப்பூர் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு சுற்று பயணங்கள் மேற்கொண்டு அங்கு தொழில் செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதன் மூலம் தமிழகத்தில் பல தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போது நடைபெற்று முடிந்த மாநாட்டில் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களினால் 6 லட்சம் கோடி முதலீடு தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முதலீடுகளால் 14 லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்று தெரிவித்த அவர் 12 லட்சம் பேர் மறைமுக வேலை வாய்ப்பு பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் விடியல் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மின்னணுவியல் உற்பத்தி வாகன தயாரிப்புகள் மின்சார வாகனங்கள் காலணிகள் எரிச்சத்தி என பல துறைகளில் தமிழ்நாட்டிற்கு முதலீடு வர இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதன் மூலமாக 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் மாநிலமாக தமிழகம் விளங்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவின் நிதி நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்கு தமிழ்நாட்டுடையதாக இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியை பாய்ச்சல் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Next Post

சாதி மாறி திருமணம்.! கதற கதற எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்.! தந்தை தப்பியோட்டம்.!

Mon Jan 8 , 2024
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால் இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக தப்பி ஓடிய பெண்ணின் தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா. இவரும் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞரும் சிறு வயது முதலே ஒன்றாக படித்து […]

You May Like