ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் கோனசீமா மாவட்டம், ராயாவரம் மண்டலத்தில் உள்ள உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலையான லட்சுமி கணபதி பனா சஞ்சா தயாரிப்பு மையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு தயாரிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களைத் தவிர, மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், மேலும் தீ அதிகரிப்பதைத் தடுக்கவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்டாசு அலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதலமைச்சர் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்..
ஆந்திரப்பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆந்திரமாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீது எனது சிந்தனைகள் உள்ளது. இதில் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.