தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு…! சென்னையில் 100% மழை குறைவு..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை 5.4 செ.மீ. மழைக்கு பதிலாக 0.9 செ.மீ. மழையே பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று வரை 0.9 செ.மீ. மழை என்பது இயல்பைவிட 83 விழுக்காடு குறைவானது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மார்ச் 1 முதல் இன்று வரை 1.5 செ.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், மழையே பதிவாகவில்லை. இதனால் சென்னையில் 100 விழுக்காடு மழை குறைந்துள்ளது. சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 100% மழை குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

இன்ப அதிர்ச்சி கொடுத்த HCL Tech நிறுவனம்! இந்த நிதிஆண்டில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை..

Sat Apr 27 , 2024
தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான HCL Tech நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.  2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் HCL Tech நிறுவனம் 3,096 புதிய பணியாளர்களுக்கு வேலை கொடுத்தது. நான்காவது காலாண்டில், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 227,481 ஐ எட்டியுள்ளது. நான்காவது காலாண்டில் தேய்வு விகிதம் 12.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய காலாண்டின் 12.8 சதவீதத்தில் […]

You May Like