பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நாளை 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ளார்..
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி.. பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக பகவந்த் மான் பதவியேற்று கொண்டார்.. இதற்கு முன்பு 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சங்ரூரில் இருந்து ஆம் ஆத்மி எம்பியாக இருந்தார்.. இந்நிலையில் பகவந்த் மான் நாளை 2-வது திருமணம் செய்ய உள்ளார்.. அவர் டாக்டர் குர்பிரீத் கவுரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது இல்லத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் திருமணத்தில் கலந்து கொள்கிறார்.. பகவந்த் மானின் தாயும் சகோதரியும் அவரை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தான் டாக்டர் குர்ப்ரீத் கவுரை பகவந்த் மானுக்காக தேர்வு செய்ததாகவும் தெரிகிறது.
முன்னதாக பகவந்த் மான் தனது முதல் மனைவி இந்திரஜித் கவுரை 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.. இவரது முதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவரது இரண்டு பிள்ளைகளும் தங்கள் தந்தையின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..