இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Risk Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Chief Risk Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு Public Sector Banks, பணிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interaction அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.07.2022 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பாண்டிய தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: Detailed-advertisement-for-Recruitment-of-Chief-Risk-Officerindian bank.pdf – Google Drive