சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நாகல்கேணி மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். பாண்டியனும் அதே மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் சிரஞ்சீவி என்பவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று, சிரஞ்சீவியின் மனைவி பவானியை கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார். இதனை கேள்விப்பட்ட சிரஞ்சீவி தனது மனைவியை திட்டிய பாண்டியனை, அவரது நண்பர் ஹரியுடன் சென்று பாண்டியனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பாண்டியனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், சிரஞ்சீவி மற்றும் ஹரியை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்