ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டம் நாத்புரா சேர்ந்தவர் பதியா கட்டாரா. இவரது மருமகள் சந்தோஷ். சொத்து தகராறில் மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருமகள் மாமனாரை அடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குடும்பத்தினர் இடையில் புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.
ஆனால் மருமகள் சந்தோஷின் கோபம் அடங்கவே இல்லை. மாமனாரை திரும்பவும் அடிக்க சென்றுள்ளார். மருமகளை அடக்க விடாமல் மாமியார் பிடித்துக் கொண்டதால், மாமனாரின் அந்தரங்க உறுப்பில் தனது கால்களால் பலமுறை எட்டி உதைத்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை, குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகும் வளி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
வீட்டிற்கு வந்த மறுநாளே அவருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் மீண்டும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காவல்துறையினர், மருமகள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மாமனாரின் அந்தரங்க பகுதியில் எட்டி உதைக்கும் மருமகள் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.