fbpx

பொன் மாணிக்கவேல் மீதான புகார்..! சிபிஐ-க்கு அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பழமையான கோயில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேலை நியமித்தது. அவரும் பல்வேறு குற்றச்சாட்டுளை விசாரித்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையே, சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக, திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பொன் மாணிக்கவேல் மீதான புகார்..! சிபிஐ-க்கு அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!

ஆனால், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

Chella

Next Post

மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறு ஆய்வின் அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு...!

Fri Jul 22 , 2022
கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி மாநில ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததை தெடர்ந்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் […]
”திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்”..! உச்சநீதிமன்றம் காட்டம்

You May Like