fbpx

செம ஜாலி.. மாணவர்களே இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…! அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மொகரம். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்., மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி இன்று புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின் பேரில் இன்று மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வருகிற 20-ம் தேதி பணிநாளாக ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மின்சார சட்டத் திருத்த மசோதா... 100 Unit இலவச மின்சாரம் கிடைக்காதா...? இதனால் என்ன பயன்...? தெரிஞ்சுக்கோங்க....

Tue Aug 9 , 2022
புதிய மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம்,100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை பறிபோகும் அபாயம் இருக்கிறது. தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் மின் வாரிய கட்டமைப்புகளை கட்டணமே இல்லாமல் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி சம்பாதிக்க வழி வகுக்கிறது இந்த மசோதா. திமுக இதனை […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like