fbpx

வந்தியத்தேவனாக நடிக்க மணிரத்னத்தின் முதல் சாய்ஸ் கார்த்தி இல்ல.. இந்த உச்ச நடிகர் தான்..

பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பலருக்கும் அது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது.

படத்தில்

இந்நிலையில் பல முயற்சிகளுக்கு பிறகு, மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடிக்க உள்ளனர்.. இப்படத்திற்காக ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. இப்படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து..

ஆனால் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளை தொடங்கியது இது முதன் முறையல்ல.. கடந்த 2015-ஆண்டு ஏற்கனவே பொன்னியின் செல்வன் பணிகள் தொடங்கப்பட்டன. விஜய், மகேஷ் பாபு, சத்யராஜ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களை பிரதானமாக வைத்து இப்படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்தார். மேலும் விக்ரம், சூர்யா, விஷால், அனுஷ்கா உள்ளிட்ட நடிகர்களையும் நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். இதில் வந்தியத்தேவனாக விஜய்யும், அருள் மொழி வர்மனாக மகேஷ் பாபுவும் நடிக்கவிருந்தனர்..

விஜய், மகேஷ் பாபு ஆகியோரை வைத்து போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பை மைசூர் பேலஸ், லலிதா மஹால் ஆகிய இடங்களில் நடத்த, அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் பட்ஜெட் பிரச்சனை காரணமாக படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்போது இப்படம் ட்ராப் செய்யப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்தது.

அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்காக, விஜய்யிடம், மணிரத்னம் ஒரு வருடம் தேதிகள் கேட்டதாகவும், ஆனால் தன்னால் அவ்வளவு தேதிகள் கொடுக்க முடியாது என்று கூறி, விஜய் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தான் இப்போது வேறு ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன். இதுவே தனக்கு சரியாக இருக்கிறது என்று விஜய் கூறியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல், செகண்ட் ஹீரோவாக நடிக்க முடியாது” என்று மகேஷ்பாபுவும் இதில் நடிக்க மறுத்து விட்டாராம். மேலும் மகேஷ்பாபு ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், மணிரத்னம் படக்குழுவினர் அந்த சம்பளத்தை விட குறைவாக சம்பளம் பேசியதாகவும் மற்றொரு தகவலும் வெளியானது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கைவிடப்படப்பட்ட பொன்னியின் செல்வன் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று ரீலிஸுக்கு தயாராகி வருகிறது..

Maha

Next Post

ஒரு ரூபாய்க்கு புடவை அறிவித்த ஜவுளிக்கடை .. முந்தியடித்துக்கொண்டு வாங்கிய பெண்கள் ..

Sat Sep 10 , 2022
கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து பெண்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று புடவை வாங்கினர். கிருஷ்ணகிரியில் ஜவுளிக்கடை ஒன்று தள்ளுபடி விலையில் ஒரு ரூபாய்க்கு புடவை தருவதாக அறிவித்தது. இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலையில் இருந்து பெண்கள் காத்திருந்தனர். காலையில் கடையை திறந்த உடனே புடவையை வாங்கிவிட வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு முந்தியடித்தனர். ஜவுளிக்கடையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சலுகை விலை […]

You May Like