fbpx

தேசிய விளையாட்டு விருதுக்கு அக்டோபர் 1-ம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்….!

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.

இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 27 என்பதிலிருந்து 2022 அக்டோபர் 1–க்கு (சனிக்கிழமை) நீடிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விளையாட்டு வீர்ர்கள் / பயிற்சியாளர்கள் / அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 1-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

Vignesh

Next Post

திருப்பதி மலைப்பாதையில் வரும் 5-ம் தேதி வரை இதற்கு தடை... வெளியான முக்கிய அறிவிப்பு...

Fri Sep 30 , 2022
திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், திருப்பதி […]

You May Like