fbpx

மகள் மீது சந்தேகம்.. பள்ளி சிறுமிக்கு பெற்ற தந்தையால் அரங்கேறிய கொடூரம்.!

தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது.

அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார்.

மேலும் கீதாவுக்கு அறிவுரையும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக ராஜசேகருக்கும்,மகள் கீதாவுக்கும் இருவருக்கிடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக பலராலும் பேசப்பட்டு வந்தது நிலையில் தந்தை ராஜசேகரும் , காதல் விவகாரம் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.

சந்தேகமடைந்த ராஜசேகர் சம்பவத்தினத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மகளை கோடாரியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இத்தகவல் அறிந்த போலீசார் தந்தை ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் ராஜசேகரின் மீது ஐபிசி பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Rupa

Next Post

சூரிய கிரகணம்.. நடை சாத்தப்பட்டதை சாதகமாக்கிய திருடர்கள்.! காஞ்சி கோவிலில் கொள்ளை.!

Thu Oct 27 , 2022
அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் 1000 ஆண்டு பழமையாது என அறிய படுகிறது. அற்புதமான சிலைகளான நடராஜர், சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் ,முருகர் பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளையும். மேலும் முருகர் வள்ளி, விநாயகர் , தெய்வானை என பத்து சுவாமி சிலைகளையும் கடந்த ஆண்டு 2018 ல் […]

You May Like