கேரள மாநில பகுதியில் உள்ள கும்பழா என்ற இடத்தில் 45 வயதான ஒருவர் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி மனவளர்ச்சி குன்றி இருக்கும் நிலையில் அதே பகுதியே சேர்ந்த பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுமியின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவனை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்ததை பார்த்த ஆசிரியை, சிறுமியிடம் விவரம் கேட்டுள்ளார்.
அப்போது சிறுமி கூறிய பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் தந்தை டிரில்லிங் எந்திரத்தால் அடிக்கடி குத்தி சித்திரவதை செய்து தன்னை பலாத்காரம் செய்து வந்ததாக மாணவி கூறியுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி ஆசிரியை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இது குறித்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயக்குமார் ஜான், சிறுமியின் தந்தைக்கு சுமார் 107 வருடம் சிறைத் தண்டனையும் மற்றும் ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.