fbpx

மீண்டும் பா.ஜ.கவே ஆட்சியை பிடிக்கும்…! வெளியான பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்கும்.

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 8-ம் ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் பிரதேச மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 34 முதல் 39 இடங்களும், காங்கிரஸ் 28 முதல் 33 இடங்களும் கைப்பற்றும் என ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி கட்சி ஒரு இடத்தையும், மற்றவை 1 முதல் 4 இடங்களும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், பாஜக 117 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 34-51 இடங்களும், ஆம் ஆத்மி 6 முதல் 13 இடங்களும், மற்றவை 1 முதல் 2 இடங்களும் கைப்பற்றும் என NEWS X கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், பாஜக 128 முதல் 148 இடங்களும்,காங்கிரஸ் கூட்டணி 31 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மி 2 முதல் 10 இடங்களும், மற்றவை 3 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை!!!

Tue Dec 6 , 2022
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. இன்று(டிசம்பர்-6) தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று காலை 4 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு […]

You May Like