fbpx

#சென்னை : தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகள்.. திடீரென வந்த ரயிலில் பலி..!

கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

அப்போது அங்கு திடீரென்று வந்த ரயிலால் செய்வது அறியாது திகைத்துப் போன நொடிகளில் இருவரின் மீதும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

#சென்னை :மின்சார இரயில் முன்பு பாய்ந்த இளைஞர்..!

Fri Dec 9 , 2022
குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொண்டு வந்த பையினை அங்கேயே ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கு வந்த […]

You May Like