#சென்னை :மின்சார இரயில் முன்பு பாய்ந்த இளைஞர்..!

குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொண்டு வந்த பையினை அங்கேயே ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கு வந்த மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் அகிலன் (23) என்பதும், வேலை தேடி சென்னை வந்ததுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் எந்த ஊரை சேர்ந்தவர், எங்கு தங்கியிருந்தார் என்றும் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Baskar

Next Post

5 ஆண்டுகளில் 36 நாடுகள்..!! பிரதமர் மோடியின் பயண செலவு எத்தனை கோடி தெரியுமா..?

Fri Dec 9 , 2022
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 36 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் செல்வதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் ராஜாங்க ரீதியிலான பயணங்கள் மூலமாக இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து இருப்பதாகவும் முக்கிய அலுவல் பயணமாகவே பிரதமர் சென்று வருவதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், பிரதமர் […]

You May Like