வெள்ளரிக்காய் அதிக நீர் சத்துள்ள ஒரு காயாகும் . கோடைகாலத்தில் இதனை எடுத்து கொள்ளும்போது உடலில் நீர் சத்து குறையாமல் சமநிலையாக பாதுகாக்க உதவுகிறது. இதலிருக்கும் விதைகள் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது.
முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் இது பயன்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயானது மிகவும் பயனளிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் முதல் சிறுநீரக நோய் தொற்று வரை இது குணப்படுத்துகிறது.
வெள்ளரிக்காயினை சாப்பிட்டு வருவதால் உடல் குளிர்சியடைந்து , உடல் சூட்டை பெருமளவில் குறைக்கிறது. மேலும் வெள்ளரிக்காய் பசியின்மையை சரிசெய்து பசியினை உண்டாக்கும் தன்மை கொண்டது. மேலும் இதில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுவதால் நாவின் வறட்ச்சியை போக்குகிறது. இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உருவாக்குகிறது.
கல்லீரல் மற்றும் ஈரல் போன்றவற்றில் இருக்கும் சூட்டினை தணித்து, வெள்ளரிக்காய் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது என்பதால் மாணவர்கள் அதிகம் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினந்தோறும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை காணலாம்.