விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.500-லிருந்து 2000 ரூபாயாவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 800-லிருந்து 4,000 ரூபாயாவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000-லிருந்து 5,000 ரூபாயாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500-லிருந்து 6,000 ரூபாயாகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.