சில ஆண்கள் திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் இவரை போல நல்லவர் இங்கு யாராவது உண்டா? என்று கேட்குமளவிற்கு அந்த பகுதியிலேயே தான்தான் நல்லவர் என்பதைப் போல வளம் வந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும்.
திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் பெண் தேடும்போது நான் என்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு, திருமணத்திற்கு பிறகு சிலர் செய்யும் தவறான செயல்களை கண்டித்தால் மனைவிமார்கள் அனுபவிக்கும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல, அதில் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருக்கின்ற மோடி நகரில் வசித்து வருபவர் விகாஷ் இவருடைய மனைவியின் பெயர் சோனியா (39). திருமணம் நடைபெற்ற சில வருடங்களுக்குப் பிறகு விகாஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனை அறிந்து கொண்ட அவருடைய மனைவி சோனியா விகாஷை பலமுறை கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக, கணவன், மனைவிக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே விகாஷ் தன்னுடைய மனைவியை கொலை செய்வதற்கு திட்டமிட்டார். தன்னுடைய பெண் தோழி உதவியுடன் அவர் கொலை செய்ய திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியாவிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக விகாஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக சோனியாவின் கணவர் விகாஷிடம் சந்தேகத்தினடிப்படையில் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தனர்.
அந்த சமயத்தில் விகாஷின் கைப்பேசியை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தனர். அதாவது விகாஷ் தன்னுடைய கைபேசியில் கூகுளில் கொலை செய்வது? எப்படி எங்கிருந்து துப்பாக்கி வாங்குவது? என்பது போன்ற இணைய தேடல்களை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. இணையதளத்தின் மூலமாக விற்பனை தளங்களில் விஷம், கத்தி உள்ளிட்ட பொருட்களையும் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் சோனியாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக விகாஷ் வாக்குமூலம் வழங்கினார். ஆகவே காவல்துறையினர் அவரை கைது செய்து, இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய பெண் தோழியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டுபிடித்த காவல்துறை குழுவிற்கு ரூபாய் 25000 பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது