நாட்டில் சற்றேற குறைய 75 சதவீதம் தவறுகள் குடிப்பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இந்த குடி பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் பொதுமக்கள் இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு பயந்து நாள்தோறும் அஞ்சி ,நடுங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
இருந்தாலும் இவை அனைத்தையும் மறந்து விட்டு பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடி செல்லும் ஒரே இடம் கோவில்தான்.
கோவில் வளாகத்திற்குள் நுழைந்து விட்டால் ஒருவித தெய்வ மனமும், மன அமைதியும் பொது மக்களிடையே குடிகொண்டு விடும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
மக்கள் நிம்மதியை தேடி செல்லும் ஒரே இடமான கோவிலில் கூட தற்போது போதை ஆசாமிகள் தங்களுடைய சேட்டைகளை தொடங்கி விட்டனர்.
அதாவது, திருநெல்வேலி மாவட்டம் மேலசேவல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (55) இவர் அதே பகுதியில் உள்ள மிகப் பழமையான நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை அவர் வழக்கமான பணிகளை முடித்துக் கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக புறப்பட்டார். இதனையடுத்து மீண்டும் அவர் திரும்பி வந்த சமயத்தில், கோவில் வளாகத்திலேயே அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா உட்பட பலர் மது அருந்தி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
கோவில் வளாகத்தில் மது அருந்துவதை கண்ட கிருஷ்ணன் அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கிருஷ்ணனுக்கும், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஒரு சிலருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அதன் பிறகு அது கைகலப்பாக மாறியது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணனை அந்த போதை ஆசாமிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட போதை ஆசாமிகள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டனர்.
இதற்கு நடுவே கிருஷ்ணனின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பகுதிக்கு வந்து பார்த்தபோது கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். இதனைக் கண்டு, கிருஷ்ணனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கிருஷ்ணன் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து முன்னீர் பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து 5️ பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய் தகராறு கோவில் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.