fbpx

குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்….! சிறுவன் உட்பட 3 பேர் அதிரடி கைது….!

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இது போன்ற தவறுகள் குறைந்து விட்டது என்று சொல்வதற்கில்லை.

ஒருபுறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் மறுபுறம் இது போன்ற தவறுகள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.அந்த வகையில், சட்டீஸ்கர் பால்கர் பகுதியில் நேற்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமையை செய்ததாக ஒரு சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த 11ம் தேதி மற்றும் 12ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போத்காட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான தஞ்சம் தாக்கூர் ஏற்கனவே அந்த சிறுமிக்கு தெரிந்தவர் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் சார்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தப் பெண்ணை சந்தித்திருக்கிறார். நகர பகுதியில் இருக்கின்ற அவருடைய தாய் வழி அத்தையின் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது மேலும் இரு குற்றவாளிகளான பிரிஜேஷ் மற்றும் பாலியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. வழியில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு போதை மாத்திரை கலந்த குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுத்ததாகவும், அதன் பிறகு காற்று பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு அந்த சிறுமி தன்னுடைய பெற்றோருடன் கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3 மணி அளவில் சார்கவான் காவல் நிலையத்தை அடைந்து குற்றம் சுமத்தப்பட்டவர் மீது புகார் வழங்கினார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீதும் 376 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஐபிசி செக்ஷன் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட எல்லோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அத்துடன் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றனர் என்று சிஎஸ்பி சுக்லா தெரிவித்தார். உள்ளூர் நீதிமன்றம் 2 நபர்களையும் நீதிமன்ற காவலில் வைத்து சிறுவனை சிறார் இல்லத்திற்கு அனுப்பியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எப்போது..? தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!

Wed Jan 18 , 2023
மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அந்த 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, […]

You May Like