fbpx

வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த மருத்துவர்கள்.. அலட்சியத்தால் உயிர் பறிபோன சோகம்..!

உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, பெண்ணின் வயிற்று பகுதியில் பேண்டேஜ் வைத்து தைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணின் வயிற்றில் இருந்த பேண்டேஜை வெளியே எடுத்தனர். இருப்பினும் அந்த பெண் உயிரிழந்து விட்டார். 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rupa

Next Post

கணவனை சுட்டுக் கொன்ற மனைவி.. காரணம் இதுதானா..!

Mon Jan 23 , 2023
புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக கடும் வலியால் துடித்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்றது […]

You May Like