fbpx

வாய்க்கு வந்ததலாம் மருத்துவமாக கூறிய ஷர்மிகா மீது நடவடிக்கை..! 

சித்த மருத்துவர் ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடை, உணவுக் கட்டுப்பாடு, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து பலர் சர்ச்சைக்குரிய ஆலோசனைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகாவின் கருத்துக்கு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. 

இதனை இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குனர் பார்த்திபன் கடந்த 9ம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் சர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

மேலும் சர்மிகா சித்த மருத்துவ கமிஷன் விதிகளுக்கு உட்பட்டு இணங்கினாரா, மருத்துவ பரிந்துரைகளை வழங்க முறையாக பதிவு செய்யப்பட்டாரா, மேலும் அறிவியல் சான்றுகளுடன் ஆலோசனை பெற்றாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

’ஒரு சேர் எடுத்துட்டு வர்ற’..!! தொண்டரை நோக்கி கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்..!! சர்ச்சை வீடியோ

Tue Jan 24 , 2023
நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதால் கோபமடைந்த அமைச்சர் நாசர், திடீரென கல்லை எடுத்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருவள்ளூர் அருகே முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, […]
’ஒரு சேர் எடுத்துட்டு வர்ற’..!! தொண்டரை நோக்கி கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்..!! சர்ச்சை வீடியோ

You May Like