fbpx

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்… தூக்கி எறியும் எலுமிச்சை பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா…!

எலுமிச்சை சாற்றை பிழிந்து, பெரும்பாலும் தோலை நிராகரிக்கிறோம். எலுமிச்சம் பழச்சாற்றைப் போலவே இதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. அதிலிருக்கும் நன்மைகளை பற்றி இங்கே காணலாம். 

எலுமிச்சை தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன. இந்த பொருட்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகின்றன, உடலின் குருத்தெலும்புகள், தசைநார்கள் மற்றும் ஹார்மோன் சுரப்பிகள் சரியாக செயல்பட உதவுகின்றன. 

மேலும் இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இதய தாளத்தை மேம்படுத்துகின்றன. எலுமிச்சை தோலிலிருந்து கிடைக்கும் எண்ணெயில் டி-லைமோனீன் (D-Limonene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இது, பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோய், இதய நோய், மூட்டுவலிக்கு வழிவகுக்கும் `ஃப்ரீ ரேடிகல்கள்’ (Free Radicals) உருவாகாமல் தடுத்து நிறுத்தும்.

எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும். சர்க்கரை நோயாளிகளுக்குக் காயம் ஏற்பட்டால், மெதுவாகத்தான் குணமாகும். ஆனால் எலுமிச்சை தோலின் சாற்றைச் சர்க்கரைநோயாளிகளின் காயங்களில் நேரடியாகத் தடவினால், காயம் சீக்கிரம் குணமாகும்’ என்று கூறப்படுகிறது. எலுமிச்சை தோலில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இது முகப்பரு வராமல் தடுக்க உதவும். எலுமிச்சை தோல் மற்றும் புதினாவை அரைத்து முகத்தில் தடவினால் முகம் பளப்பளப்பாக காணப்படும். எலுமிச்சைத் தோல் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்த உதவும், புதினா இலை முகத்தைப் பொலிவாக்க உதவும்.

Rupa

Next Post

எதற்கு ஆங்கில வார்த்தை..? ’திராவிட மாடல்’ குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி...

Wed Jan 25 , 2023
திராவிட மாடலில் உள்ள ‘மாடல்’ என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் பலகையில் தூய தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like