ஆவடி பகுதியில் நான்கு வயது பெண் குழந்தை இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அக்குழந்தையின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
ஆவடியைச் சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் இவருக்கு திருமணமாகி பதினோரு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
தினமும் வேலைக்குச் செல்லும் அப்பெண் தனது மகளை தனது அக்காவின் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். பணி முடித்து வரும்போது மகளையும் கூட்டிக் கொண்டு வந்து விடுவார். சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் தனது மகளை வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார்.
இரவில் வெகு நேரமாகியும் குழந்தை தூங்காமல் அழுது கொண்டே இருந்திருக்கிறது. அப்போது விசாரித்ததில் அந்தப் பெண்ணின் பெரியப்பா, குழந்தையிடம் தவறான பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அந்தக் குழந்தையின் பெரியப்பாவான 53 வயது ரபிக் என்ற ராஜ்குமார் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.