fbpx

கண்ணை மறைத்த கள்ளக்காதல்! நண்பனின் பிஞ்சு குழந்தைகளை கொன்ற இளைஞர்!

திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு  ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய  வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25  இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். இவருடன் அசாமை சார்ந்த துவர்க்கா பார் என்பவரும் பணியாற்றி வந்தார். துர்கா பாருக்கு திருமணம் ஆகி  சுமிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  குட்டுலுவுக்கும் சுமிதாவுக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் அது  நெருக்கமாகி இருக்கிறது. பின்னர் இருவரும்  மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த  துர்கா பார் தன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் குட்டுலு வீட்டிற்கு  சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குட்டுலு வீட்டிற்கு சென்று இருக்கிறார் துர்கா பார். அவரது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை அறிந்த அவர்  ஜன்னல் வழியாக பார்த்தபோது  அவர் கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. குட்டுலு வீட்டின் உள்ளே  தனது இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும்  மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்ட அவர் பதறிப் போய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட  துர்கா பாரின்  குழந்தைகள் சிவா மற்றும் ரீமா ஆகியோரின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது காவல்துறை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலை மறைவாக இருக்கும் குட்டுலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

ஆந்திராவில் பரிதாபம்: எண்ணெய் தொழிற்சாலையின் விதிமீறல்களால் 7 பேர் மூச்சு திணறி பலி!

Thu Feb 9 , 2023
ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் ஆலையை சுத்திகரிக்கச் சென்ற ஏழு பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்  பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள  பெத்தபுரம் மண்டலத்தில் ஜி ராகம்பேட்டா  என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அம்பட்டி சுப்பண்ணா  என்ற எண்ணெய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இயங்கி வரும் ஒரு எண்ணெய் டேங்கில் மட்டும்  கடந்த இரண்டு நாட்களாக […]

You May Like